என் மனதில் இருக்கும்
ஒவ்வொரு வலிக்கும்
நீயே மருந்து
என் கவலைகளை
உன் மழலை பேச்சால்
தினம் தினம் களைகிறேன்
உன் வார்த்தைகள் ஒவ்வொன்றும்
என் வாழ்க்கைக்கு இலக்கணங்கள்
இலக்கண பிழையாய்
அவ்வபோது உன் மௌனங்கள்
அதையும் ரசிக்கிறேன்
நீ பேசா கவிதைகளில்
இதுவும் ஒன்றென்று...
No comments:
Post a Comment