30.10.08

ஒரு முறை


இறந்து விட்டேனா?

இறைவனிடம் வேண்ட வேண்டாம்
இன்றைய டாக்டரிடமும் கேட்க்க வேண்டாம்

தவறுதலாக தொடர்ச்சியாய் சொல்ல மறந்ததால்
இதயம் கொஞ்சம் தடுமாறி விட்டது அவளவுதான்

சொல்லுங்கள் அவள் பெயரை
என் காதோரம் ஒரு முறை

அருகில் நீ


நாவின் நுனியில் இருந்து
தாவ துடித்த வார்த்தைகள்
இன்று என்னை தேடவிட்டு
வேடிக்கை பார்க்கிறது - நீ
என் அருகில் இருப்பதால்...

22.9.08

மொளனம்


பேசி பேசி என்னதை கண்டோம் என்று
பலர் சொல்ல கேட்டதுண்டு - ஆனால்
நாம் பேசியது
நம் தாய் மொழிக்கே தெரியாத போது
இவர்களுக்கா தெரிய போகிறது

16.9.08

மென்மை...


குழந்தையின் காற்று பட்டு சினுங்கும்

பூவின் இதழ்கள் தோற்று போகும்

விடை பெருகிறேன் என்று - அவள்

தலை அசைத்து செல்கையில்...

நீ போதும்...


உறவுக்கு மருமகளாய்
உள்ளதில் மகளாய்
என் தாயிக்கு நீ இருந்தால்

உள்ளதில் மணைவியாய்
உண்மையில் தாயாய்
என் அருகே நீ இருந்தால்

எனக்கும் என் தாயிக்கும்
மறுபிறவி தேவை இல்லை...